புதுடில்லி,:பாரகம்பா சாலையில் உள்ள கோபால்தாஸ் பவன் கட்டிடத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுடில்லி, பாரகம்பா சாலையில் 17 மாடிகளைக் கொண்ட கோபால் தாஸ் பவன் கட்டடத்தில் வங்கி உட்பட பல தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு, இந்தக் கட்டடத்தின் எட்டாவது மாடியில் தீப்பிடித்தது. அது அடுத்தடுத்த தளங்களுக்கும் வேகமாக பரவியது.
அந்தக் கட்டடத்தில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றிய தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் இரு வீரருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
தீயணைப்புத் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், எட்டாவது தளத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்த கழிவுப் பொருட்களில் தீப்பற்றி, அது மின் ஒயர் வழியாக பெரும் தீயாக பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய பாரகம்பா சாலை போலீசார், தீ அல்லது எரியக்கூடிய விஷயங்களில் அலட்சியமாக இருந்தல், மற்றவரின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement