சபரிமலை:வெளிநாடுகளில் வாழும் ஐயப்ப பக்தர்கள் தேங்காயுடன் கூடிய இருமுடி கட்டுடன் விமானத்தில் வர மத்திய விமானத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
சபரிமலைக்கு வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். விமானங்களில் இருமுடி, நெய் தேங்காய் எடுத்துவர அனுமதி கிடையாது. இதனால் அவர்கள் கொச்சி வந்து அங்கு கோயிலில் இருமுடி கட்டி கோட்டயம், எருமேலி வழியாக வருகின்றனர்.
இந்நிலையில் விமானத்தில் தேங்காயுடன் இருமுடி எடுத்து வர ஜனவரி 15 வரை அனுமதியளித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பக்ரைனில் இருந்து கேரளாவைச் சேர்ந்த சசிகுமார் தலைமையில் 10 பேர் இருமுடி கட்டுடன் வந்து தரிசனம் நடத்தினர். நீண்ட காலமாக பக்ரைனில் இருப்பதாகவும், மத்திய அரசின் உத்தரவு மூலம் அங்கிருந்தே இருமுடி கட்டுடன் வந்து தரிசனம் செய்து மகிழ்ச்சியுடன் திரும்புவதாகவும் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement