வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்திநகர்: 1960-ம் ஆண்டுக்கு பின் குஜராத்தின் கிப்ட் நகரில் மது அருந்த மாநில அரசு முதல்முறையாக அனுமதி வழங்கி உள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகரில் கட்டப்பட்டு உள்ள இந்தியாவின் முதல் சர்வதேச நிதி சேவை மையமான (குஜராத் இண்டர்நேஷனல் பைனான்ஸ் டெக் சிட்டி) கிப்ட் நகரில் மது அருந்தலாம் என அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்நகரம் சிங்கப்பூருடன் ஒப்பிடப்படுகிறது.
போதை மற்றும் கலால் துறை கூறுகையில், கிப்ட் சிட்டி பகுதியில் ஒயின் உள்ளிட்ட மது வககைளை அனுமதிப்பதற்காக தடைகட்டுப்பாட்டு விதிகளை மாற்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மேற்கண்ட சிட்டி நகரத்தை தவிர்த்து மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மது விலக்கு கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என தெரிவித்து உள்ளது.
இதன் மூலம் கிப்ட் சிட்டியில் பணிபுரியும் அனைவருக்கும் மது அருந்த அனுமதி வழங்கப்படும்.ஒவ்வொரு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்கள் மற்றும் நிரந்தர பணியாளர்கள் மது அருந்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
1960ம் ஆண்டு மே 1-ம் தேதி குஜராத் மாநிலம் உருவான தினத்தில் இருந்து மது விலக்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது.தொடர்ந்து எந்த ஒரு நகரத்திலும் மது அருந்த அரசு அனுமதித்தது கிடையாது. தற்போது 63 ஆண்டுகளுக்கு பின்னர் மது விலக்கு கொள்கையில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement