புதுடில்லி:டில்லி சாஹிபாபாத்தில் ஆர்.ஆர்.டி.எஸ்., எனப்படும் பிராந்திய விரைவு போக்குவரத்து ரயில் நிலைத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் யூனின் மின்சார உற்பத்தி செய்யும் சூரியஒளி மின் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
இதுகுறித்து, தேசிய தலைநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசிய தலைநகர் போக்குவரத்துக் கழகத்தின், சாஹிபாபாத் மற்றும் துஹாய் ஆகிய நிலையங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இரண்டு சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நேற்று துவக்கப்பட்டன.
சாஹிபாபாத் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 729 கிலோவாட் திறன் கொண்ட சூரியஒளி மின் உற்பத்தி நிலையத்தில் 1,620 உயர் திறன் கொண்ட சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு ஆண்டுக்கு 10 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இந்த மின் நிலையத்தை தேசிய தலைநகர் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் வினய் குமார் சிங் நேற்று திறந்து வைத்தார்.
துஹாய் நிலையத்தில் 585 கிலோ வாட் திறன் கொண்ட சூரியஒளி மின் நிலையம் ஜூலையில் நிறுவப்பட்டது. இந்த இரு நிலையங்களும் ஆண்டுக்கு 1,600 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியிடுவதைக் குறைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்-பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement