சென்னை: சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். முதல் படத்திலேயே மதுரைகாரன் சம்பவம் செய்த சசிகுமார், அடுத்தடுத்து ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். இந்நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள அவர், இந்த முறை மிரட்டலான கதையை இயக்கவுள்ளாராம். சசிகுமார் இயக்கத்தில் சத்யராஜ்தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் சுப்ரமணியபுரம்.