வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வானிலை ஆய்வு மையத்தில் உள்ளகருவிகள் அனைத்தும் உலகதரத்திலானவையாக உள்ளன என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
![]() |
இது குறித்து அவை தெரிவித்து இருப்பதாவது: இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் உலகதரத்திற்கு ஒப்பானவை.சென்னை வானிலை மையத்தை ஆய்வு செய்ய 2 டாப்ளர் ரேடார்களும் தென்தமிழகத்தை கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் உள்ளன. அதிவேக கணினிகள் இஸ்ரோவின் செயற்கைகோள் வசதிகள் ரேடார்கள் உள்ளன. இதில் எக்ஸ்வகை பேண்டுகள் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும். நாட்டின் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை மையத்தில் பணிபுரிகின்றனர்.
தானியங்கி வானிலை சேகரிப்பான்கள் உள்ளிட்ட நவீவன கருவிகள் உலக தரத்திற்கு ஒப்பானவை. வர்தா, கஜா,நிவர்,மிக்ஜாம் புயல்கள் குறித்த வானிலை மைய எச்சரிக்கையால் பெருமளவு உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன. வானிலை ஆய்வு மையம் நவீனமாக இல்லை என்று வெளியான விமர்சனங்கள் தவறானவை.
![]() |
முன்னதாக தென் தமிழகத்தில் பெய்த கனமழை குறித்து கருத்து தெரிவித்த தமிழக அரசு வானிலை ஆய்வுமையம் சரியாக கவனித்து தகவல் அளிக்கவில்லை என கூறி இருந்தது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement