2024 Upcoming Hyundai SUVs, EV list – 2024 ஆம் ஆண்டு ஹூண்டாய் வெளியிட உள்ள எஸ்யூவி மற்றும் கார்கள்

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியா நிறுவனம் 2024 ஆம் ஆண்டினை துவங்க கிரெட்டா எஸ்யூவி மாடலுடன் புதிய அல்கசார், சான்டா ஃபீ மற்றும் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்  ஆகியவற்றுடன் எலக்ட்ரிக் வரிசையில் கிரெட்டா EV, ஐயோனிக் 6 மற்றும் கோனா எலக்ட்ரிக் வெளியாகலாம்.

2024 Hyundai Creta Facelift

ஜனவரி 16 ஆம் தேதி ரூ.11 லட்சத்தில் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ள நிலையில் தோற்ற அமைப்பில் சிறிய மாற்றங்களுடன் கூடுதலாக ADAS பாதுகாப்பு அம்சங்களுடன் வரவுள்ளது.

115 hp பவர், 143.8 Nm டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அடுத்த என்ஜின் 116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜிடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரு என்ஜினிலும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.

கூடுதலாக, 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

hyundai creta

2024 Hyundai Alcazar Facelift

7 இருக்கை பெற்ற ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி காரில் 116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜிடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரு என்ஜினிலும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.

கூடுதலாக, 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

2024 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியாக உள்ள ஹூண்டாய் அல்கசார் விலை ரூ.17 லட்சம் ஆக அறிவிக்கப்படலாம்.

hyundai alcazar

New Hyundai Santa Fe

மீண்டும் ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது 180hp பவர் மற்றும் 265Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடல் இந்திய சந்தைக்கு வரும் வாய்ப்புகள் மிக குறைவுதான்.

new hyundai santa fe

2024 Hyundai Tuscon Facelift

ஹூண்டாய் டூஸான் விற்பனையில் உள்ள நிலையில் மேம்பட்ட மாடல் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு ரூ.30 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

150 hp பவர்  192 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர்  பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது. இந்த மாடலில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

182 hp பவர், 400 Nm டார்க் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் கொண்டுள்ளது. இந்த மாடலில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. டீசல் மாடலில் ஆல் வீல் டிரைவ்  கிடைக்கின்றது.

hyundai-tucson

Hyundai Creta EV

துவக்கநிலை சந்தையில் உள்நாட்டிலே தயாரிக்கப்பட உள்ள முதல் எலகட்ரிக் எஸ்யூவி மாடலாக ஹூண்டாய் கிரெட்டா EV ஆனது 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம்.

ஒற்றை மோட்டார் பொருத்தப்பட்டு 45kWh பேட்டரி பேக் பெற உள்ள கிரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி  138hp பவர் மற்றும் 255Nm டார்க் வெளிப்படுத்தலாம். தோற்ற அமைப்பில் கிரெட்டா மிகவும் புதுப்பிக்கப்பட்டு சிறப்பான வகையில் கனெக்ட்டிவ் அம்சங்களுடன் 350-450 கிமீ ரேஞ்ச் வழங்கலாம்.

ஹூண்டாய் கிரெட்டா EV எலக்ட்ரிக் எஸ்யூவி விலை ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சத்தில் துவங்கலாம்.

creta ev spied

Hyundai Ioniq 6

ஏற்கனவே இந்திய சந்தையில் ஐயோனிக் 5 விற்பனையில் உள்ள நிலையில் கூடுநலாக எலக்ட்ரிக் செடான் மாடலாக உள்ள ஹூண்டாய் ஐயோனிக் 6 விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் வெளியிடப்படலாம்,

சர்வதேச அளவில், 228 PS மற்றும் 350 Nm டார்க் வழங்குகின்ற சிங்கிள் மோட்டார் கொண்ட 77.4 kWh பேட்டரி பேக் பெற்றதாக அமைந்து  WLTP முறையில் 610 கிமீ ரேஞ்ச் கொண்டுள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 6 விலை ரூ.45 – ரூ 50 லட்சத்தில் துவங்கலாம்.

hyundai ioniq 6

2024 Hyundai Kona Electric

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள கோனா எலக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலில் 48.4kWh மற்றும் 65.4kWh என 2 பேட்டரி பேக் விருப்பங்களைப் பெறுகிறது. முறையே 155PS மற்றும் 218PS வெளிப்படுத்துவதுடன் முழுமையாக சார்ஜ் செய்தால் 490 கிமீ வரை ரேஞ்ச் என ஹூண்டாய் குறிப்பிட்டுள்ளது.

டேஸ்போர்டில் இரட்டை 12.3-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, 12-இன்ச் ஹெட்-அப் டிஸ்ப்ளே, 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, ADAS பாதுகாப்பு தொகுப்பு மற்றும் வாகனம்-2-லோட் (V2L) சார்ஜிங் ஆகியவை பெற்றுள்ளன.

2024 மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற 2024 ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் விலை ரூ. 26 லட்சத்தில் வெளியாகலாம்.

2024 hyundai kona electric

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.