சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த பிரமோக்கள் மற்றும் அதையொட்டிய எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்த சீரியலில் கேள்விக்குறியான தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க பாக்கியா போராடி வருகிறார். ஆனாலும் ஜெனி சார்பில் செழியனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையொட்டி ஜெனி வீட்டிற்கு பாக்கியா மற்றும் அவரது குடும்பத்தினர் கேட்கப்போக, அதனால் பிரச்சினை ஏற்படுகிறது.
