வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காசா: காசாவில், இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஒரே குடும்ப உறவினர்கள் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில், ஓய்வு பெற்ற ஐ.நா., ஊழியரும் அடங்குவார்.
இஸ்ரேலுக்குள், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அவர்களின் மறைவிடங்களை குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படை குண்டுகளை வீசி வருகிறது. காசாவின் கான் யூனிஸ் என்ற இடத்தில் இஸ்ரேலிய விமானப்படை குண்டு வீசி தாக்கியது.
இதில் ஐ.நா., நிவாரண வளர்ச்சி திட்டத்தில் ஊழியராக பணிபுரிந்த, இஸாம் அல் முக்ரபி(56) அவரது மனைவி, 5 குழந்தைகள் மற்றும் அவரது உறவினர்கள் என 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement