ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தை கலக்கிய மகாதேவ் சூதாட்ட ஆப் (செயலி) விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சவுரபா சந்திரகர் என்பவர் துபாயில் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு சமீபத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. அப்போது தேர்தல் செலவுக்காக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு கூரியர் மூலம் ரூ. 508 கோடி பணம் வந்ததாக புகார் எழுந்தது.
இப்பணத்தை அனுப்பியவர் மகாதேவ் சூதாட்ட ஆப் (செயலி) ஒன்றின் உரிமையாளர் என தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கூரியர் நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்தி ரூ. 5.86 கோடி ரொக்கப்பணம், கார் முதலியவற்றை பறிமுதல் செய்தனர்.
அமலாக்கத்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் வட மாநிலங்களில் மகாதேவ் சூதாட்ட செயலி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்து.
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சவுரபா சந்திரகர் என்பவர் துபாயில் கைது செய்யப்பட்டு, வீட்டு காவலில் உள்ளதாகவும், அவரை தூதரக உதவியுடன் நாடு கடத்தி கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement