உடல் நலக்குறைவுக் காரணமாக தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் விஷால் கண்ணீர் மல்க இரங்கல் செய்தியை வீடியோ மூலம் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், “ கேப்டன் விஜயகாந்த் அண்ணே இறந்த செய்தியைக் கேள்விப் பட்டேன். அண்ணே என்ன மன்னிச்சிடுங்க. இந்த நேரத்துல நான் உங்க பக்கத்துல இருந்து உங்க முகத்த ஒரு முறைப் பார்த்து காலைத் தொட்டு கும்பிட்டு உங்கக் கூட இருந்திருக்கணும்.

இப்போ நான் வெளிநாட்டில் இருந்தது என்னுடைய தப்புதான். அதற்காக என்னை மன்னிச்சிடுங்க. நல்லது செய்யுறதுங்கிறது சாதாரண விஷயம் அல்ல. உங்ககிட்ட இருந்துதான் அதைக் கத்துக்கிட்டேன். உங்க அலுவலகத்துல யாராவது பசியோடு வந்தா நீங்க சாப்பாடு போட்டு அனுப்புவிங்கன்னு எல்லாரும் சொல்வாங்க.
நானும் அந்த மாதிரி செய்யணும்னு ஆசைப்பட்டிருக்கேன். இன்னைக்கு ஒரு நல்ல அரசியல்வாதியை, நடிகர் சங்கத் தலைவரை இழந்தோம் என்று சொல்வதை விட ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம் என்பதை என்னால ஜீரணிக்க முடியல. நடிகர் சங்கத்திற்கு நீங்கள் செய்த உதவிகள், உங்களுடைய நிர்வாகம், செயல்பாடுகள், போன்றவற்றிற்காக நல்ல பெயரை வாங்கி இருக்கீங்க. ஆனால் ஒரு நல்ல மனிதரா பெயர் வாங்குறது சாதாரண விஷயமில்ல.
— Vishal (@VishalKOfficial) December 28, 2023
சிலருக்குத்தான் அந்த பெயர் நீடிக்கும். அந்தப் பெயர் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. என்னை மன்னிச்சிடுங்க அண்ணே. இப்போ உங்க பக்கத்துல இருந்திருக்கனும். உங்க ஆத்மா சாந்தி அடையனும். உங்க பெயர்ல மேற்கொண்டு சில நல்ல செயல்களை எல்லாம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்திருக்கிறார்.