தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பினால் சில மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 2.30மணி முதல் மண்சரிவு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.
அதற்கிணங்க பதுளை மாவட்டத்தில் பதுளை, ஹாலில் மற்றும் பண்டாரவளை பிரதேச செயலக பிரிவுகளுக்காக விழிப்புடன் இருக்குமாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறே கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை, மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம, மொனராகலை மாவட்டத்தில் மெதகம மற்றும் நுவரெலிய மாவட்டத்தின்ஹங்குரங்கெத, வைப்பதை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.