தற்போதைய பருவ மழையினால் பொலன்னறுவை மற்றும் கொடலிய பாலம் அருகில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்லேல்ல மற்றும் கொடலிய பாலத்தின் ஊடாக வாகனங்கள் செல்வதை இடைநிறுத்தியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் தெரிவித்தார்.
அதேவேளை பொலன்னறுவை மின்னேரியக் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் அதன் வான்கதவினூடாக 1000 கன அடி வேகத்தில் செல்வதாக மின்னேரியக் குளத்தின் நீர்ப்பாசனப் பிரிவு அறிவித்துள்ளதுடன் இந்நிலைமையினால் ரொட வாவி மற்றும் அதை அண்டிய பிரதேச மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் பொலன்னறுவை கல்லேல்ல மற்றும் கொடலிய பாலம் அருகில் நீர் மட்;டம் அதிகரித்துள்ளதாகவும், அதனால் மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான வீதியூடான கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் குறிப்பிட்டுள்ளார்.