பிரமானந்தம் எழுதிய சுயசரிதை : சிரஞ்சீவி வெளியிட்டார்

தெலுங்கு சினிமாவின் முன்னணி காமெடி மற்றும் குணசித்ர நடிகர் பிரம்மானந்தம். விரைவில் தனது ஆயிரமாவது படத்தை தொட இருக்கிறார், தெலுங்கு சினிமாவில் அவர் இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் மொழி, சரோஜா, சத்யம், குசேலன், பயணம், லிங்கா, அஞ்சான், வாலு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் தனது சொந்த வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியிருக்கிறார். இதில் அவர் தன் சினிமா வாழ்க்கையை முழுமையாக அதே நேரத்தில் காமெடியாகவும் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. தனது சுயசரிதை புத்தகத்தின் முதல் பிரதியை பிரம்மானந்தம் சிரஞ்சீவிக்கு வழங்கினார்.

இதுகுறித்து சிரஞ்சீவி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “பல ஆண்டுகளாக ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வரும் நடிகர் பிரம்மானந்தம் எனது நெருங்கிய நண்பர் ஆவார். சினிமா துறையில் 40 ஆண்டுகளாக அவர் இருக்கிறார். இந்த 40 ஆண்டுகளில் பிரம்மானந்தம் சந்தித்த மனிதர்கள், அறிமுகங்கள், தெரிந்து கொண்ட விஷயங்கள், பார்க்கும் கோணங்கள், தனக்கு ஏற்பட்ட எத்தனையோ அனுபவங்களை எல்லாம் உள்ளடக்கிய தனது வாழ்க்கையை புத்தமாக எழுதி வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவர் அனுபவம் மற்றொருவருக்கு பாடம். வழிகாட்டுதலாகவும் ஆகலாம். இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் கிடைக்கும்'' என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.