வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கேரளாவில் மார்க்., கம்யூ.,வை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கும் மோதல் போக்கு தொடர்கதையாகி வருகிறது.கேரள அரசால் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தரமால் கிடப்பில் போட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளில் வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் விதித்தது.
இந்நிலையில் கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் கவர்னர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களின்படியும், அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள விதிகளின் கவர்னர் தனது சட்டகடமையாற்றி விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement