புதுடில்லி:டில்லியில் மேலும் 1,000 சூரியஒளி மின்சார கூரைகள் அமைக்க பி.எஸ்.இ.எஸ்., திட்டமிட்டு உள்ளது.
தலைநகர் டில்லியில் மின்சார சப்ளை செய்து வரும் நிறுவனமான பி.எஸ்.இ.எஸ்., 6,000 சூரியஒளி மின்சார கூரைகள் அமைத்து உள்ளது.
வரும் 2024 – 20-25ம் நிதியாண்டில் மேலும் 1,000 சூரியஒளி மின்சார கூரைகள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, பி.எஸ்.இ.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது:
டில்லியில் தற்போது வீடுகளில் 3,650, வணிகக் கூடங்களில் 1,087, கல்வி நிறுவனங்களில் 939, தொழிற்சாலைகளில் 85 மற்றும் பிற இடங்களில் 129 என சூரியஒளி மின்சார கூரைகள் உள்ளன.
டில்லியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்போர் சங்கங்கள் சூரியஒளி மேற்கூரை அமைக்க ஆர்வமாக உள்ளன. இதனால், நுகர்வோர் வாயிலாக ஆண்டுக்கு 110 கோடி ரூபாய்க்கு மேல் சேமிக்க முடிகிறது.
மின்சார கட்டணங்களைக் குறைக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் சூரியஒளி மின்சார கூரை அமைப்பதே சிறந்தது.
ஒவ்வொரு கிலோ வாட் மேற்கூரை சோலார் வாயிலாக மாதத்துக்கு 120 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதை அமைப்பதற்கான செலவை நான்கே ஆண்டுகளில் மீட்டெடுத்து விட முடியும்.
ஒவ்வொரு மாதமும் 1,200 யூனிட்கள் மாதாந்திர நுகர்வு கொண்ட ஒரு வழக்கமான 10 கிலோ வாட் சூரியஒளி கூரை இணைப்பு வாயிலாக ஆண்டுக்கு 82,000 ரூபாய் சேமிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement