சிவாஜி நகர் : ஆங்கில புத்தாண்டை ஒட்டி, உலகில் அமைதி நிலவ, 108 கலசங்களுடன் மஹா பூஜை நடக்கிறது.
ஆங்கில புத்தாண்டை ஒட்டி, சிவாஜி நகர் அங்காள பரமேஸ்வரி கோவிலில், இன்று இரவு விக்னேஸ்வர பூஜையுடன், 108 கலசங்களுடன் 24 மணி நேரம் மஹா பூஜை துவங்குகிறது.
இதை தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், துர்கா பரமேஸ்வரி ஹோமம்; நாளை அதிகாலை பூர்ணாஹூதி, தீபாராதனை, 108 கலச அபிேஷகம், மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. தீபாராதனை, அர்ச்சனை நடக்கிறது.
காலை, மாலையில், நாதஸ்வர இசை; மதியம் தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மாலையில், வைஷ்ணவி நாட்டிய சாலையின் குரு மிதுன் ஷியாமின் மாணவியரின் பரதநாட்டியம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை, தலைவர் வேலு, பொருளாளர் சதிஷ் குமார், பொது செயலர் ரமேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement