கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் பெய்த மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய குளமாக திகளும் உன்னிச்சை குளம் 33 அடி நீரினை கொள்ளளவாக கொண்டுள்ள நிலையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அறிக்கையின் பிரகாரம் 10″ அடிக்கு மேல் நீர் வான் பாய்வதனால் குளத்தின் 3 கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் ஒரு கதவு 60″ அடி ஏனைய இரண்டு கதவுகளும் 72″ அடி மாக திறக்கப்பட்டுள்ளன.
உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டுள்ளமையால் அப்பிரதேச விவசாய நிலங்கள் மற்றும் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமை காணப்படுவதால் அப்பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு உன்னிச்சை குளம் திறக்கப்பட்டுள்ளமையினால் வவுணதீவு – ஆயித்தியமலை பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.