ஜனவரி 5.., 2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதி விபரம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்டுகளில் விற்பனைக்கு ஜனவரி 5, 2024 வெளியிட உள்ளதாக தனது சமூக ஊடகங்ளில் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் புதிய பிரீமியம் 2024 மாடலில் 5 அங்குல TFT டிஸ்பிளே கொண்டிருக்கும் என்பதனை டீசர் மூலம் வெளியிட்டுள்ளது.

2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

தற்பொழுது வரவிருக்கும் 2024 மேம்படுத்தப்பட்ட மாடலில்  இரு விதமான பேட்டரி விருப்பங்களை பெற உள்ளது. சேட்டக் பிரீமியம் வேரியண்ட் மூலம் 3.2kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக 126 KM ரேஞ்ச் வழங்கும் என IDC சான்றியளிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் டாப் ஸ்பீடு 73km/hr ஆகும்.

2.88kWh பேட்டரி பெறுகின்ற சேட்டக் அர்பேன் 2024 ஸ்கூட்டரின் ரேஞ்ச் 113 கிமீ ஆக வழங்கவும், இதில் டெக்பேக் அல்லாத மாடல் மணிக்கு 63 km/hr மற்றும் டெக்பேக் பெற்ற வேரியண்ட் வேகம் மணிக்கு 73 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாம் பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை உறுதிப்படுத்தியிருந்தோம். இந்த மாடல் ரூ.1.15 லட்சம் முதல் ரூ.1.44 லட்சம் விலைக்குள் அமையலாம். மேலதிக விபரங்கள் அறிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

மேலும் படிக்க – பஜாஜின் சேட்டக் முழுவிபரம்

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.