
இதோடு நிப்பாட்டுங்க : ரச்சிதாவின் இன்ஸ்டா பதிவு யாருக்கு?
பிரபல சின்னத்திரை நடிகர்களான தினேஷ் மற்றும் ரச்சிதா கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலும் இவர்களது பிரச்னையை வைத்து விசித்ரா பேசியது சோஷியல் மீடியாவில் பூதகரமானது. இந்நிலையில், ரச்சிதா அடுத்தவர் வாழ்க்கையில் தலையிடாதீர்கள் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் சரியான விஷயத்திற்கு தனியாக இருந்தாலும் நில்லுங்கள். உண்மை கசக்கதான் செய்யும். அதற்காக உண்மை இல்லை என்று ஆகிவிடாது. என் வாழ்க்கையை மதிப்பிடுபவர்களால் என் வாழ்க்கையை வாழ முடியாது. இது என்னுடைய தனிப்பட்ட போராட்டம். தனியாக போராட விடுங்கள். எல்லாரும் உங்க வேலைய பாருங்க, எங்கள எங்க வேலைய பார்க்க விடுங்க' என்று கூறியுள்ளார்.