இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களில் ஒன்றான ஏர்டெல், அதன் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கவர்ச்சியான சலுகையை வழங்குகிறது. ஏர்டெல் பயனர்கள் இப்போது ஒரு வருட இலவச அமேசான் பிரைம் உறுப்பினர் ஆப்சனைப் பெறலாம். இந்த சலுகை ஏர்டெல் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். போஸ்ட்பெய்டு பயனர்கள் ரூ.499 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தில் இருந்தால், ப்ரீபெய்டு பயனர்கள் ரூ.349 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால், பிராட்பேண்ட் பயனர்கள் ரூ.999 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்திற்கு மாறினால் இந்த சலுகை கிடைக்கும்.
உங்கள் இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பைப் பெற, பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:
– உங்கள் ஆப் ஸ்டோரில் இருந்து Airtel செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும்.
– உங்கள் ஃபோன் எண்ணைப் பயன்படுத்தி செயலியை ஓபன் செய்து, மேல் வலது மூலையில் உள்ள “டிஸ்கவர் ஏர்டெல் தேங்ஸ்” என்பதை கிளிக் செய்யவும்.
– கீழே ஸ்க்ரோல் செய்து அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் ஆப்ஷனைக் கண்டறிந்து, “கிளைம்” பட்டனைத் தட்டவும்.
– நீங்கள் Amazon Prime Login பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் Reward- ஐ பெற, உங்கள் login விவரங்களை உள்ளிடவும்.
– இந்த சலுகை 2024 ஆகஸ்ட் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும். எனவே, நீங்கள் இந்த சலுகையைப் பெற விரும்பினால், உடனடியாக உங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் கிளைம் செய்யவும்.
இந்த சலுகை ஏர்டெல் பயனர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு 1 நாள் டெலிவரி, பிரைம் டே விற்பனைக்கான முன்கூட்டிய அணுகல் மற்றும் சிறப்பு தயாரிப்பு சலுகைகள் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். இந்த சலுகையைப் பயன்படுத்தி, நீங்கள் இந்த நன்மைகளை அனுபவித்து, உங்கள் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்தலாம்.