நியூசிலாந்தில் நடைபெற்று வரும் Super Smash Twenty – 20 லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தபத்து, தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே தனது சகலதுறை ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
வெலிங்டன் அணிக்கெதிராக நேற்று மவுன்ட் மௌங்கானுவில் நடைபெற்ற போட்டியில் சாமரி அதபத்து 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 19 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்தார். அவர் 2 கேட்ச்களை காப்பாற்றி 16 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 19 ஓட்டங்களை எடுத்தார். இந்த ஆட்டத்தால், சாமரி தனது அறிமுக ஆட்டத்திலேயே சிறந்த வீராங்கனை என்ற விருதை வெல்ல முடிந்தது.
சூப்பர் ஸ்மாஷ் தொடரின் 11வது போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் துடுப்பெடுத்தாடிய நொதர்ன் வீராங்கனைகள் வெலிங்டன் அணியை 110 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தனர். 4 போட்டிகளில் விளையாடிய வெலிங்டனுக்கு இது முதல் தோல்வியாகும்.
நொதர்ன்; அணிக்காக கெய்ட்லின் கேரி 28 பந்துகளில் 33 ஓட்டங்களையும், சேம் கர்டிஸ் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் எமீலியா கெர் மற்றும் நிக்கோல் பெய்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஜேஸ் கெர் 23 ஓட்டங்களைப் பெற்று வெல்லிங்டன் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை பெற்றதுடன், சாமரி அத்தபத்து 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, வு20 யில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். மாரமா டவுன்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒடாகோ அணிக்கு எதிராக நொடர்ன் அணியினர் விளையாடும் அடுத்த போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது.