வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பார்லி., லோக்சபா தேர்தலையொட்டி தமிழக டி.ஜி.பி. சார்பில் இன்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு பார்லி., லோக்சபாவிற்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கஜிவால் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான செய்தியில், காவல் உயரதிகாரிகள் பதவி உயர்வு பெற்று சொந்த ஊரில் இருந்தாலோ, ஒரே இடத்தில் தொடர்ந்து மூன்றாண்டுகள் பணியில் இருந்தாலோ அவர்கள் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஜூன் 30-க்குள் மூன்று ஆண்டுகள் பணியில் இருந்தவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கவும், எஸ்.ஐ. முதல், ஏ.டி.ஜி.பி. வரையிலான அதிகாரிகளின் பட்டியலை ஜன.10-ம் தேதிக்குள் தயாரித்து அனுப்பி வைக்கவும், கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள அதிகாரிகளை தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடாது, அதே போல் ஒய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்றுள்ள அதிகாரிகளையும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது, தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான அதிகாரிகளையும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement