SA vs IND: என்ன நடக்கிறது சவுத் ஆப்பிரிக்காவில்? 2 ஓவரில் 6 விக்கெட்டை இழந்த இந்தியா!

India vs South Africa 2nd Test: தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடர் டிராவில்  முடிந்த நிலையில் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது. கடந்த வாரம் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் படுமோசமாக இருந்தது தோல்விக்கான காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று கேப்டவுனில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவும், சர்துல் தாக்கூருக்கு பதிலாக முகேஷ் குமாரும் அணியில் இடம் பெற்றனர்.  முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது, சிராஜின் வேகத்தில் சிக்கி தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.  தென் ஆப்பிரிக்கா அணியில் இரண்டு பேர் மட்டுமே இரட்டை இலக்கங்களில் ரன்களை அடித்திருந்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்குகளில் அவுட் ஆகி வெளியேறினர்.  வெறும் 55 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட் ஆனது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவே அவர்களின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

Siraj weaving magic at Newlands! Impeccable length and a spellbinding display of seam bowling!#SAvIND pic.twitter.com/keq8mJQLat

— Sachin Tendulkar (@sachin_rt) January 3, 2024

இந்நிலையில் முதல் இன்னிங்சில் களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் சற்று நன்றாக விளையாடியது.  ஜெய்ஸ்வால் மட்டும் ரன்களின்றி அவுட் ஆனார்.  153 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்து நல்ல நிலையில் இருந்த இந்திய அணி அடுத்த இரண்டு ஓவர்களில் ஆறு விக்கெட்களை இழந்து ஆள் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.  விராட் கோலி ஒரு முனையில் இருக்க மறுமுனையில் இருந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகி வெளியேறினர்.  153 ரன்களில் நான்கு விக்கெட்கள் இழந்த நிலையில், இந்திய அணி அதே 153 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.  இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் ஆகியோர் 0 ரன்களில் அவுட்டாகி உள்ளனர்.  இந்த டெஸ்டில் ஒரே நாளில் 20 விக்கெட்கள் விழுந்துள்ளது.

0,8,0,0,0,0,0.

India’s No.5 to No.11 score today. pic.twitter.com/xhygErDV7u

— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 3, 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.