சுதந்திரத்தின் பின்னர் ஆபத்தான நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தினால் 20 23 இல் மீண்டும் சரியான பாதையில் வைக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன (02) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.
புது வருடம் மிகவும் தீர்மானமிக்க ஆண்டாவதுடன் தற்போதைய பொருளாதார சவால்கள் 2027 வரை காணப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை 2024 இறுதி வரை சரியாக முன்னெடுத்துச் சென்றால் நிலமையை மட்டுப்படுத்தலாம் என்றார்.
அத்துடன் புதிய வருடத்தில் காணப்படும் பொருளாதார ஸ்தீரனமின்மையை எதிர்கொண்டு நாட்டிற்கு செய்யக்கூடிய அதிகபட்சமாக அர்ப்பணித்து, அதிகமாக வேலை செய்தல் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் கடன் வழங்குநர்களின் சங்கம் ஏற்படுத்திய புரிந்துணர்விற்கு அப்பால் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு நாள் கூட நடத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
உலக தர விதிகள் மற்றும் நிதி ஒழுக்கத்திற்கு உட்பட்டு ஒரு நாடாக நாம் பிணைப்பத்திரங்கள் வழங்கப்பட்டு கடன் கோரப்பட்டாலும் 2027ஆம் ஆண்டு பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை 1500 மில்லியன் அமெரிக்க டொலர்களே எனவும் அமைச்சர் குணவர்தன மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்;
2024 ஆம் ஆண்டு எமது நாட்டின் தீர்மானமிக்க வருடமாக நான் பார்க்கிறேன். சுதந்திரத்தின் பின் நாட்டில் ஏற்பட்ட நிலமையில் மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்பி வீழ்ந்து கிடந்த பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தினால் பொருத்தமான இடத்தில் வைத்துள்ளார். ஆனாலும் பிரதானமாக சவால்களை எதிர்வரும் மூன்று நான்கு வருடங்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ள வேண்டியேற்படும். 2027வரை இலங்கையில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் யாருடைய ஆட்சி வந்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக சர்வதேச சந்தைக்குச் சென்று கடன் பெற முடியாது.
அதனால் கிடைத்துள்ள 2024 ஆண்டும் 2025, 2026 மற்றும் 2027 எனும் ஆண்டுகளுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாட்டுக் கடன் வழங்குனர்களுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தின் பத்தில் ஒரு பங்கையாவது மாற்றினால் நாட்டை ஆளலாம் என்றால் அந்த அரசாங்கத்தின் அதிகூடிய காலம் இரண்டு வாரங்கள் தான் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம். ஏனெனில் சர்வதேச நாணய நிதியம் இல்லாவிடின் உலக வங்கி இல்லாது போனால் ஆசிய அபிவிருத்தி வங்கி அதுவும் இல்லாது விடின் கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தமின்றி நாட்டின் பொருளாதாரத்தை ஒரு நாளும் கொண்டு செல்ல முடியாது.
இறக்குமதியை பெரிதும் நம்பியிருக்கும் பொருளாதாரத்தைக் கொண்ட நமது நாட்டில் பெட்ரோலியம், உரங்கள், மருந்துகள் இரசாயனப் பொருட்கள், அரிசி, மா, சீனி, பெரிய வெங்காயம், மிளகாய், பரிப்பு போன்ற பொருட்களும், இயந்திரங்கள், ஆட்டோமொபைல்கள் மற்றும் வாகனங்கள் போன்ற மூலதனப் பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டும்.
அவற்றைக் கொண்டு வருவதற்காக அரசின் இருப்புக்களுக்கு ஏற்ப கடனுக்கான கடிதங்கள் வழங்குவதற்கு சர்வதேசத்திற்கு அது போதுமானதாகக் காணப்படாவிடின் உலக சந்தையில் உலக பொருளாதாரத்தில் அது காணப்படும் விதத்தில் கடனுக்கான ஆவணங்களை உலகின் ஏனைய நாட்டு வங்கிகளில் அது அங்கீகரிக்கப்படமாட்டாது. அவ்வாறான நிலை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் நமது நாட்டிற்கும் ஏற்பட்டது. எரிபொருள் இல்லை. பசளை இல்லை. எரிவாயு இல்லை. இரசாயனப் பதார்த்தங்கள் இல்லை. சாப்பிடவோ குடிக்கவோ அவசியமானவை இல்லை. எதுவும் இன்றி அந்தப் பொருளாதாரம் இரண்டு வாரங்கள் கூட செல்லாது. ஆதனால் நமக்குக் கிடைத்துள்ள புது வருடத்தில் இவ்வாறு காணப்படும் பொருளாதார சிக்கல்களுக்கு முகங்கொடுத்து நாட்டிற்காக செய்யக் கூடிய அதிக அர்ப்பணிப்புக்களை செய்து, அதிகம் அதிகமாக செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தினார்.