2019/2020 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையில் விஞ்ஞான மற்றும் கணித துறையில் சித்தியடைந்த தாதியப் பயிற்சிக்காக விண்ணப்பங்களை அனுப்பிய மாணவர்களை தாதியப் பயிற்சிக்காகத் தெரிவு செய்வதற்கு அடிப்படைத் தகைமைகளை பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வர நடாத்தப்படவிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 2024.01.04 இலிருந்து அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் (https://www.health.gov.lk/) பார்வையிடலாம் என சுகாதார அமைச்சு விண்ணப்பதாரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.