நாட்டில் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் முக்கிய இடத்தில் இருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகள். உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டங்களில் நடமாடும் யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளால் மனித எதிர்கொள்ளகள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில், பந்தலூர் அருகில் கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் நடந்து சென்ற மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியது. காயமடைந்த மூன்று பெண்களில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், படுகாயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதே பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் சிறுமி ஒருவர் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தி மக்கள் கடையடைப்பு மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டுகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பந்தலூர் அருகில் உள்ள மேங்கோரேஜ் தேயிலைத் தோட்டத்தில் பயணியாற்றும் வடமாநில பெண் தொழிலாளி ஒருவர், தனது 3 வயது மகளை அங்கன்வாடியிலிருந்து இன்று மாலை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென சிறுமி மீது பாய்ந்து இழுத்துச் சென்றுள்ளது.
இதைக் கண்டு பதறிய அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுத்தையை விரட்டியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வரும் சிறுத்தையைப் பிடிக்காத வனத்துறையைக் கண்டித்து மக்கள் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வந்த சிறுத்தைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.