சோமாலியா கடற்கரை அருகே 4-ம் தேதி மாலை கடத்தப்பட்ட ‘எம்.வி லிலா நார்ஃபோக்’ என்ற சரக்குக் கப்பலிலிருந்த இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்களும் மீட்கப்பட்டு நாடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலில், சோமாலிய கடற்பகுதியில் ஜனவரி 4-ம் தேதி மாலை எம்.வி. லிலா நோர்ஃபோல்க்( MV LILA NORFOLK) என்ற லைபீரிய நாட்டுக் கொடியுடைய சரக்குக் கப்பல், பிரேசிலிலிருந்து பஹ்ரைன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்போது அடையாளம் தெரியாத 5-6 நபர்கள் ஆயுதங்களுடன் கப்பலில் ஏறிவிட்டதாக, எம்.வி. லிலா நோர்ஃபோல்க் கப்பல், பிரிட்டனின் கடல் வர்த்தக செயல்பாடுகளைக் கண்காணிக்கும் UKMTO அமைப்புக்குச் செய்தி அனுப்பியிருந்தது. இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட இந்தியக் கடற்படை, ஒரு ரோந்து விமானத்தை அனுப்பிச் சோதித்திருக்கிறது. மேலும் லைபீரியா கப்பலுக்கு உதவ ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பலையும் அந்தப் பகுதிக்குத் திருப்பிவிட்டது.
நேற்று சம்பந்தப்பட்ட கப்பலுக்கு அருகே, இந்திய ரோந்து விமானம், எம்.வி. லிலா நோர்ஃபோல்க் கப்பலிலிருந்த குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்ய, அந்தக் கப்பலுடன் தொடர்பு கொண்டது. அதே நேரம் கடத்தப்பட்ட சரக்குக் கப்பலை இந்திய ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பல் நெருங்கிவிட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படையின் எச்சரிக்கையின் விளைவாகக் கடற்கொள்ளையர்கள் கடத்தப்பட்ட கப்பலைக் கைவிட்டுவிட்டுத் தப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும், கடத்தப்பட்ட சரக்குக் கப்பலிலிருந்த 15 இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும், மெரைன் கமாண்டோக்களின் சோதனையில் கப்பலில் கடத்தல்காரர்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மீட்கப்பட்ட கப்பல் இந்தியா வந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில், அமெரிக்கா,“இந்தத் தாக்குதல்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இதுபோன்ற சர்வதேச கடல்வழிப் பாதைகளில் நடத்தப்படும் தாக்குதல், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்” எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்தத் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,“இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார சில சக்திகளுக்குப் பொறாமையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் அரபிக் கடலில் எம்.வி கெம் புளூட்டோ கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதையும், சில நாட்களுக்கு முன்பு செங்கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் இந்திய அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் கடலுக்கு அடியிலிருந்தாலும்கூட கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.