மொபைல் வாங்கப்போறீங்களா… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க – அமேசானில் வருகிறது அதிரடி விற்பனை!

Amazon Great Republic Day Sale 2024, Smartphones: அமேசான் நிறுவனம் இந்தியாவில் அதன் அடுத்த தள்ளுபடி விற்பனையின் வருகையை அறிவித்துள்ளது. அதாவது, 2024 புத்தாண்டின் முதல் தள்ளுபடி விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை (Amazon Great Republic Day Sale 2024) தளத்தில் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது. 

அதற்கு முன்னதாக, அந்த தள்ளுபடியில் பல வரவிருக்கும் சலுகைகளை அமேசான் வெளிப்படுத்தியுள்ளது. ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவின் குடியரசு தினத்திற்கு முன்னதாக வரும் வாரங்களில் இந்த தள்ளுபடி விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு வழக்கம்போல் தள்ளுபடி விற்பனைக்கு ஒரு நாள் முன்கூட்டியே அணுகல் கிடைக்கும் எனலாம்.

இந்த விற்பனையானது பல்வேறு பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு பெரிய தள்ளுபடியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, வங்கி சலுகைகள் மற்றும் நோ-காஸ்ட் EMI ஆப்ஷன்களும் கிடைக்கும். அந்த வகையில், அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் குறித்து இதில் காணலாம். 

Motorola Razr 40

கிரேட் குடியரசு தின விற்பனையில் இந்த மொபைல் தள்ளுபடி செய்யப்படும் என்று அமேசான் உறுதிப்படுத்தியுள்ளது. இது விற்பனையில் 45 ஆயிரம் ரூபாய்க்குள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.

iPhone 13

ஆப்பிள் ஐபோன் 13 அமேசானின் கிரேட் குடியரசு தின விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த மொபைலின் தள்ளுபடி விலை வெளியிடப்படவில்லை, ஆனால் இதன் விலை 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Honor 90 5G
 
தற்போது 35 ஆயிரம் ரூபாய் முதல் இந்த மொபைல் விற்பனை செய்யப்படுகிறது, சலுகைகளுடன் சுமார் 30 ஆயிரம் ரூபாய் விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

iQOO Neo 7 Pro

இந்த மொபைல் கிரேட் குடியரசு தின விற்பனையில் தள்ளுபடி செய்யப்படும். இந்த மொபைல் சலுகைகளுடன் சுமார் 30 ஆயிரம் ரூபாய் விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் விலை 32 ஆயிரத்து 999 ரூபாயாகும்.

OnePlus Nord 3 5G

வழக்கமாக 33 ஆயிரத்து 999 ரூபாய் விலையில், வரவிருக்கும் கிரேட் குடியரசு தின விற்பனையில் 30 ஆயிரம் ரூபாய்க்குள் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு முன்னதாக, இந்த மொபைல் கூப்பன் சலுகையைப் பெற்றுள்ளது, அதன் விலை 30 ஆயிரம் ரூபாய்க்குள் உள்ளது.

இந்த மொபைல்களும்…

இவை சில சிறந்த சலுகைகள் என்றாலும், அமேசான் விற்பனை பக்கத்தில் அதிக சலுகைகள் காணக்கிடைக்கின்றன. Narzo 60x 5G, iQOO Z7 Pro 5G, Galaxy M14 5G மற்றும் பிற சாதனங்களும் அமேசான் கிரேட் குடியரசு தின சேலில் விற்பனைக்கு வரும்.

வழக்கமான விற்பனை தள்ளுபடிகள் தவிர, அமேசான் வங்கி சலுகைகளை வழங்க வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு உடையவர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி 5 சதவீத தள்ளுபடி சலுகையும் இருக்கும். கூடுதலாக, தயாரிப்புகளை மாதத் தவணையில் வாங்க ஆர்வமுள்ளவர்கள் கிரெடிட் கார்டு EMI விருப்பங்களில் சலுகைகளையும் பெறுவார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.