சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அவர் தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த சூழலில் அவர் உதவி இயக்குநர்களுக்கு உதவிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
