மாலே: சைபர் தாக்குதலால் மாலத்தீவு அரசின் இணைய தளங்கள் முடங்கி உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த தீவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் தீவின் அழகான, தூய்மையான கடற்கரை பகுதிகளின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் சுற்றுலா துறையை நம்பியிருக்கும் மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது. பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் அவதூறாக விமர்சித்தனர்.
இந்த சூழலில் மாலத்தீவின் அரசு இணையதளங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. மாலத்தீவு வெளியுறவுத்துறை, சுற்றுலா துறை இணையதளங்கள் முழுமையாக முடங்கின. மாலத்தீவு அரசின் பெரும்பாலான இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக மாலத்தீவு அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.