'ஜர்னி'யில் 5 பேரின் கதை: சேரன்

இதுவரை திரைப்படங்களை இயக்கி வந்த சேரன் கடைசியாக 'திருமணம்' என்று படத்தை இயக்கினார். தற்போது வெப் தொடர் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளார். அவர் இயக்கி உள்ள 'ஜர்னி'(பயணம்) என்ற வெப் தொடர் வருகிற 12ம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது. 9 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் 5 பேரின் வாழ்க்கை பின்னணியில் விவசாயத்தை வலியுறுத்தும் தொடராக தயராகி உள்ளது.

சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், திவ்யபாரதி, கலையரசன், காஷ்யப் பார்பயா, ஜெயப்பிரகாஷ், மாரிமுத்து, வேல.ராமமூர்த்தி, அனுபமா குமார், 'நாடோடிகள்' பரணி, 'ஆடுகளம்' நரேன், இளவரசு, அஞ்சு குரியன் நடித்துள்ளனர். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசை அமைத்துள்ளார்.

இது குறித்து சேரன் கூறும்போது “இதுவரை 11 படங்களை இயக்கி இருக்கிறேன். இப்போது முதன் முறையாக ஒரு வெப் தொடரை இயக்கி உள்ளேன். சினிமாவில் 2 அல்லது இரண்டரை மணி நேரத்தில் கதை சொல்கிறோம். வெப்தொடரில் கதையை விரிவாகவும், மிக அழுத்தமாகவும் சொல்லலாம். 'ஜர்னி' அனைவருக்குமான கதை. எல்லோருமே இந்த தொடரின் கதையையோ அல்லது குறைந்தபட்சம் சில காட்சிகளையோ கடந்து சென்றிருக்க முடியும். பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், காஷ்யப் பார்பயா, திவ்யபாரதி ஆகிய 5 பேர் பற்றிய கதை இது. விவசாயத்தின் அவசியம் குறித்தும், அது ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் இல்லை, பெண்களுக்குமானது என்பதையும் பேசியிருக்கிறேன். விவசாயத்தைப் பற்றி பேசும் கேரக்டராக திவ்யபாரதி நடித்திருக்கிறார்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.