மட்டக்களப்பில் வீதியோர வியாபார நிலையங்கள் திடீர் முற்றுகை!!

மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி பகுதிகளில் வீதியோரமாக உள்ள வியாபார நிலையங்களை மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீரென முற்றுகையிட்டனர்.

இதன் போது 7 வியாபார நிலையங்களில் மனித பாவனைக்கு உதவாத கெரட், கருவா, வாழைப்பழம், தோடம்பழம், இனிப்புப் பண்டமான பூந்தி போன்ற பெருமளவிலான பொருட்களை கைப்பற்றியதாகவும், அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் த.மிதுன்ராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட முற்றுகையின்போது கல்லடி பொது சந்தை சதுக்கம், கல்லடி, திருகோணமலை வீதி, அரசடி, ஊறணி போன்ற பகுதிகளில் உள்ள வீதியோர வியாபார நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மரக்கறி வகைகள், பழ வகைகள், மீன்கள், கருவாடு போன்ற பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.