
ரஜினியுடன் கபில்தேவ் : லால் சலாம் புகைப்படத்தை வெளியிட்ட லைகா நிறுவனம்!
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், கபில்தேவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் லால் சலாம். இந்த படத்தில் ரஜினி மொய்தீன்பாய் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். பொங்கலுக்கு திரைக்கு வருவதாக இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று இப்படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் கிரிக்கெட் வீரர் கபில் தேவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறது லைகா நிறுவனம். அதோடு லால் சலாம் படத்தில் ரஜினியுடன் அவர் இணைந்து நடித்துள்ள ஒரு காட்சியின் புகைப்படத்தையும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.