2024 கவாஸாகி Eliminator 450 பைக் பற்றி 5 முக்கிய அம்சங்கள்

கவாஸாகி இந்தியாவில் வெளியிட்டுள்ள புதிய எலிமினேட்டர் 500 பைக்கில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் போட்டியாளர்கள், விலை தொடர்பான அனைத்தும் முக்கிய அம்சங்களாக தொகுத்து அறிந்து கொள்ளலாம்.

Kawasaki Eliminator Design

நவீனத்துவமான அர்பன் க்ரூஸர் ஸ்டைலை பெற்றுள்ள கவாஸாகி எலிமினேட்டர் 500 பைக்கில் நியோ ரெட்ரோ டிசைனை கொண்டதாக நேர்த்தியான பெட்ரோல் டேங்க் அமைப்பினை பெற்று வட்ட வடிவத்தை பெற்ற எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டெயில் லைட் கொண்டு மிக குறைவான இருக்கை உயரம் பெற்றுள்ளது.

ஸ்டீல் டெர்லிஸ் சேஸ் கொண்டதாக அமைந்துள்ள குறைந்த உயரம் உள்ளவர்களுக்கு ஏற்ற வகையில் 735 மிமீ உயரம் மட்டுமே பெற்றுள்ளது. சர்வதேச சந்தையில் பல்வேறு நிறங்களை பெற்றாலும் இந்தியாவில் ஒற்றை மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் கருப்பு நிறத்தை கொண்டதாக அமைந்துள்ளது.

Kawasaki Eliminator 400 cluster

Eliminator 500 Engine

ஏற்கனவே சந்தையில் உள்ள Z400 என்ஜின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள கவாஸாகி எலிமினேட்டர் 450 பைக் மாடலில் 451cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் என்ஜின் பொருத்தப்பட்டு 9,000 rpm சுழற்சியில் 45 bhp பவர் மற்றும் 6,000rpm சுழற்சியில் 42.6 Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக் மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.

eliminator 450 engine

Eliminator 500 வசதிகள்

எலிமினேட்டர் 450 பைக்கில் முன்புறத்தில் 130/70-18 அங்குல அலாய் வீல் பெற்று டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பருடன் பின்பக்கத்தில் 150/80-16 அங்குல வீல் உள்ளது.

வட்ட வடிவத்தை பெற்ற டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றுள்ள கவாஸாகி எலிமினேட்டர் 450 பைக்கில் ஸ்பீடோமீட்டர், டேக்கோமீட்டர், கடிகாரம், ஓடோமீட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் மற்றும் எரிபொருள் அளவு ஆகியவை அடங்கும்.

அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளுக்கான கவாஸாகி ரைடாலஜி ஆப் ஸ்மார்ட்போன் இணைப்பு மூலம் புளூடூத் இணைப்பு பெற்றதாக அமைந்துள்ளது.  டூயல்-சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ள இந்த பைக்கில் முன்பக்கத்தில் 310-மிமீ செமி ஃபுளோட்டிங் டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் பிரேக் பின்புறத்தில் பெற்றுள்ளது.

kawasaki eliminator 450

Eliminator 500 rivals

இந்திய சந்தையில் பிரீமியம் பேரலல் ட்வீன் என்ஜின் பெற்ற க்ரூஸர் பைக் மாடலில் கவாஸாகி எலிமினேட்டர் 450 பைக்கிற்கு போட்டியாக சூப்பர் மீட்டியோர் 650, வரவிருக்கும் ஷாட்கன் 650 பைக் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Kawasaki Eliminator 500 on road Price

ரூ.5.62 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ள கவாஸாகி எலிமினேட்டர் 500 பைக்கின் தமிழ்நாடு ஆன் ரோடு விலை ₹ 6.60 லட்சம் ஆகும்.

Kawasaki Eliminator 400

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.