வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். கோயில் கட்டுமானம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள நிலையில், கோயிலின் உள்ளே மற்றும் வெளியே மின்னொளியில் சிலைகள், கட்டுமான வேலைபாடுகள் போன்றவைகள் ஜொலிக்கிறது. இது சம்பந்தமான பிரத்யேக புகைப்படங்களை ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement