வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: “தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும். சென்னையில் இன்று(ஜன.,08) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்” என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குமரிக்கடலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது.
புதுச்சேரியில் ஜனவரியில் இதுவரை இல்லாத அளவு மழை பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement