VAT வரி செலுத்துபவர்கள் அனைவரும் வரி கோப்புக்களை வைத்திருந்தால் மற்றும் VAT வரி செலுத்தும் ஒவ்வொரு வியாபாரிகளும் தாம் செலுத்த வேண்டிய வரித் தொகையை செலுத்தினால், கிடைக்கப் பெறும் வருமான அதிகரிப்பினூடாக VAT வரி செலுத்த வேண்டிய சதவீதத்தை குறைக்க முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
VAT வரி செலுத்த வேண்டியவர்கள் அதிகம் பங்களிப்பதன் மூலம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு VAT வரி அறவிடும் சதவீதத்தைக் குறைக்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உரிய தகவல்களை உடனடியாக அறிவிக்கும் முறைமையொன்றை ஆரம்பித்து இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.