2024 ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் கிடைக்கின்ற மிக குறைந்த விலை பெற்ற 7 இருக்கை கொண்ட எம்பிவி ரக ரெனால்ட் ட்ரைபர் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு ரூ.5.99 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான ரெனோ ட்ரைபர், க்விட் மற்றும் கிகர் எஸ்யூவி மாடல்கள் விற்பனைக்கு கூடுதல் வசதிகள் மற்றும் நிறங்களை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2024 Renault Triber

7 இருக்கை பெற்ற ட்ரைபர் எம்பிவி காரில் கூடுதலாக 19க்கு மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை பெற்றதாகவும், ஸ்டெல்த் கருப்பு நிறத்தை கொண்டதாகவும் மற்றபடி வசதிகளில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை.

1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 72 hp பவர் மற்றும் 96 Nm டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்கின்றது.

டிரைவர் இருக்கை ஆர்ம்ரெஸ்ட்,  ORVM, 7-இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், RXT வேரியண்டில் ரியர் வியூ கேமரா மற்றும் பின்புற வைப்பருடன் கூடுதலாக டாப் வேரியண்ட் RXL பின்புற ஏசி வென்ட், PM2.5 காற்று ஃபில்டர் பெறுகிறது

RENAULT TRIBER
Variant
RXE Rs 6.00 lakh
RXL Rs 6.80 lakh
RXT Rs 7.61 lakh
RXT AMT Rs 8.13 lakh
RXZ Rs 8.23 lakh
RXZ AMT Rs 8.75 lakh

 

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.