சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்ட நிலையில் துவக்க ஆட்டக்காரர்களாக 18 பேர் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருந்தனர். இதில் எழுத்தாளர் பவா செல்லதுரையும் ஒருவர். எழுத்தாளரான இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது தவறு என்று முன்னதாக விமர்சனங்கள் எழுந்தன.
