ஆங்கிலப் பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் அனிருத்

இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களின் அபிமான இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். அவரது இசையில் வெளியாகும் பாடல்கள் பலவும் சூப்பர் ஹிட்டாவதும், யு டியூபில் 100 மில்லியன் பாடல்களை அதிகமாகக் கடப்பதும் நடக்கிறது. இருந்தாலும் அவர் மீது அவ்வப்போது காப்பி சர்ச்சை விமர்சனங்களும் எழுகிறது.

தெலுங்கில் அவர் இசையமைத்து வரும் 'தேவரா' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அதற்கு அதிகமான பார்வைகள் கிடைத்து, சாதனையும் புரிந்திருக்கிறது. அந்த வீடியோவில் 'ஆல் ஹெயில் த டைகர் (All Hail The Tiger) என்று ஆங்கிலத்தில் அமைந்த பாடலை பின்னணி இசையாகப் பயன்படுத்தியுள்ளார். அந்த பாடலை நேற்று தனியாக யு டியூபில் வெளியிட்டனர். அதில் பாடலை எழுதியது ஹீசன்பெர்க் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாடலை இசையமைத்து பாடியிருக்கிறார் அனிருத்.

இதற்கு முன்பு 'லியோ' படத்தின் அறிமுக வீடியோவில் 'ப்ளடி ஸ்வீட்' என்ற தலைப்பில் ஆங்கிலப் பாடலைப் பயன்படுத்தியிருந்தார். அந்தப் பாடலையும் ஹீசன்பெர்க் தான் எழுதியுள்ளார். அனிருத் தான் இசையமைத்து பாடியிருந்தார்.

அதற்கும் முன்பாக வந்த 'விக்ரம்' படத்தில் 'வேஸ்டட்' என்ற ஆங்கிலப் பாடலையும் ஹீசன்பெர்க் எழுத அனிருத் பாடி இசையமைத்திருந்தார்.

அனிருத் இசையமைக்கும் படங்களில் தொடர்ந்து அனிருத் – ஹீசன்பெர்க் கூட்டணியின் ஆங்கிலப் பாடல்கள் கவனம் ஈர்க்கிறது. யார் அந்த ஹீசன்பெர்க் என ரசிகர்கள் கேட்டாலும் அனிருத் எந்த பதிலையும் சொல்லவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.