குடிநீர் மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான புதிய தேசிய கொள்கையை மக்கள் மத்தியில் முன்வைத்து அவர்களின் கருத்துகளை கோருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நீர்வழங்கல்துறை மறுசீரமைப்புக்கான வழிநடத்தல் குழு இன்று கூடியது.
கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் நடைபெற்றது.
‘ குடிநீர் மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான புதிய தேசிய கொள்கைகள் மற்றும் நீர் வழங்கல் இணைப்புகள் தொடர்பான புதிய வழிகாட்டல்களை பொதுமக்களின் கருத்துக்காக முன்வைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.’ – என்று இதன்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பான குடிநீரை குறைந்த விலையில் தொடர்ச்சியாக வழங்குவதே தமது நோக்கம் எனவும் கூறினர்.
நீர்வழங்கல் துறை மறுசீரமைப்புக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவி வழங்கி வருகின்றது.