வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் ஏற்படும் உயிர் இழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடந்தது. அப்போது, ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசியதாவது: காசாவில் காணப்படும் சூழ்நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் மற்றும் மனிதநேய உதவிகளை நீட்டிப்பதற்கும் இந்தியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போரால் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பலியாகி உள்ளனர். உயிர் இழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாதத்திற்கு பூஜ்ய சகிப்பின்மை அணுகுமுறையை இந்தியா கொண்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளின் தலைவர்களுடன் தொடர்ந்து, இந்தியாவின் தலைமை தொடர்பில் உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் விவகாரத்தில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே ஒரே வழியாகும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement