’அடல்ட்’ திரைத் துறை கொடுமைகளை அம்பலப்படுத்திய இளம் நடிகை திடீர் மரணம்

லிமா: பெரு நாட்டைச் சேர்ந்த ‘அடல்ட்’ திரை நட்சத்திரமான தைனா ஃபீல்ட்ஸ் என்பவர் போர்னோ படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அவர் தனது 24-வது வயதில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டைச் சேர்ந்த 18+ பட நட்சத்திர நடிகை தைனா ஃபீல்ட்ஸ். இவர் வயது வந்தோருக்கான போர்னோ படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தைனா ஃபீல்ட்ஸ் தனது திரைத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்தத் துறையில் தான் சந்தித்த பிரச்சினைகள் குறித்து பகிரங்கமாக பொதுவெளியில் தகவல் வெளியிட்டிருந்தார். தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பொதுவாக, போர்னோ திரைத் துறைக்குப் பின்னால் நடிகைகள் அனுபவிக்கும் பாலியல் சித்திரவதைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. அதை அம்பலப்படுத்திய இவர், “என்னை அழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பார்கள். இதையெல்லாம் கடந்து நான் வீட்டுக்குச் சென்றவுடன் குளித்துவிட்டு, மனமுடைந்து அழுவேன். பல சமயங்களில் எனக்கு அப்படி நடந்திருக்கிறது.

இந்தச் சமூகத்தில் ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கஷ்டமானது. அதைவிட அடல்ட் கன்டென்ட் கிரியேட்டராக இந்தச் சமூகத்தில் வாழ்வது என்பது மிகக் கொடுமையானது’’ என வெளிப்படையாக பேசியது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று சர்வதேச அளவில் பேசுபொருளானது.

இந்நிலையில், பெரு நாட்டின் ட்ரூஜில்லோ நகரில் உள்ள வீட்டில் நடிகை தைனா பீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தற்போது அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபீல்ட்ஸ் இணைந்து பணியாற்றிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மில்க்கி பெருவும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

அதாவது, “இந்த கெட்ட கனவிலிருந்து யாராவது எங்களை எழுப்புவார்கள் என்று நம்புகிறோம்; நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்க எங்களை அனுமதித்ததற்கு நன்றி” எனத் தெரிவித்திருக்கிறது. மேலும், தைனா பீல்ட்ஸ் மறைவு குறித்து அவரது தோழியும், நடிகையுமான அலெஜான்ட்ரா ஸ்வீட் தனது வேதனையுடன் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.