ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக நயன வாசலதிலக இன்று (12) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பதுளை தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அவர்களின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு வாசலதிலக இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரவளை, புனித தோமஸ் கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த அவர் சமையல்கலை தொடர்பில் பட்டப்படிப்பையும், வர்த்தக முகாமைத்துவம் தொடர்பில் சுவிட்சர்லாந்திலும் பட்டப்படிப்பை நிறைவே செய்துள்ளார். அத்துடன், சமையல்கலைஞராக பல வருடங்கள் அனுபவம் கொண்ட அவர் அவுஸ்திரேலியாவில் முன்னிலை ஹோட்டல் ஒன்றில் மற்றும் இலங்கையில் முன்னிலை ஹோட்டல் ஒன்றிலும் சமையல்கலைஞராக சேவையாற்றியுள்ளார். நயன வாசலதிலக தற்பொழுது முயற்சியாளராக உள்நாட்டு மற்றயும் வெளிநாட்டு பல வர்க்கங்களின் உரிமையாளராவார்.
2015 இல் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலுக்குப் பிரவேசித்த இவர் 2020 பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதுளை தேர்தல் மாவட்டத்தில் 31,307 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
2001 இல் இஷானி கெஹெல்பன்னலவை மணம்முடித்த நயன வாசலத்திலக ஒரு பிள்ளையின் தந்தையாவார்.