வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று (ஜன., 12) திறந்து வைக்கிறார். மும்பைக்கும் நவி மும்பைக்கும் இடையிலான பயண நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 20 நிமிடமாக குறைக்கப்படும். இது மஹாராஷ்ட்டிர போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கும்.
துறைமுகங்களுடன் இணைப்பை ஏற்படுத்தும் முக்கிய பாலமாக விளங்கும். 22 கி.மீட்டர் நீளம் கொண்டது இந்த பாலம்.
பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று மஹாராஷ்டிரா வருகை தர உள்ளார். மஹாராஷ்டிராவில் ரூ. 17 ஆயிரத்து 840 கோடி மதிப்பில் இந்தியாவின் மிகவும் நீண்ட அட்டல்-சேது கடல் மேல் பாலம் திறப்பு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி மஹாராஷ்டிரா வருகிறார். மேலும் 30 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement