இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024 ஜனவரி 14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2024 ஜனவரி 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பொதுவாக சீரான காலநிலை காணப்படும்.
ஊவா, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ வரையிலான ஓரளவு பலத்த காற்றும் வீசக்கூடும்
மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனி மூட்டமான நிலையொன்று காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.