மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், அவனியாபுரத்தை சுற்றி உள்ள 10 மதுபான கடைகளை நாளை ஒருநாள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி உள்ளன. ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான மதுரையில் நாளை போட்டிகள் தொடங்குகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும் மதுரையி ல் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகின்றன. அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று […]
