Tata Punch.ev Range – டாடா பஞ்ச்.ev எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் விபரம் வெளியானது

வரும் ஜனவரி 17 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள டாடா பஞ்ச்.இவி எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் மற்றும் பேட்டரி விபரம் உள்ளிட்ட சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்டாண்டர்டு மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது.

பஞ்ச்.இவி காரில் ஸ்டாண்டர்டு வேரியண்டில்  ஸ்மார்ட், ஸ்மார்ட்+, அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு+ என 5 வேரியண்டுகளும், டாப் LR அடிப்படையில் அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு+ என மூன்று வேரியண்டுகளும் பெற்று மொத்தம் ஐந்து டூயல்-டோன் நிற ஆப்ஷனை பெறுகின்றன.

Tata Punch.ev Range

டாடா மோட்டார்ஸ் நெக்ஸான்.இவி காரின் தோற்ற உந்துதல் மற்றும் இன்டிரியர் அடிப்படையில் என அனைத்தும் பெரும்பாலான வசதிகள் பெற்றிருக்கலாம்.

பஞ்ச்.இவி மாடலில் ஸ்டாண்டர்டு வேரியண்ட் 25 kWh பேட்டரி பேக் பெற்று 82 PS பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்தும், முழுமையான சிங்கிள் சார்ஜில் 315 கிமீ ரேஞ்ச் வழங்கும் என MIDC சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் டாப் ஸ்பீடு மணிக்கு 115 கிமீ ஆகும்.

Long Range மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 35 kWh பேட்டரி பேக் பெற்று 122 PS பவர் மற்றும் 190 Nm டார்க் வெளிப்படுத்தலாம். முழுமையான சிங்கிள் சார்ஜில் 400 கிமீ ரேஞ்ச் வழங்கும் என MIDC சான்றிதழ் பெறப்படும். இந்த வேரியண்ட்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 140 கிமீ ஆகும்.

punch-ev-rear

ஆக்சைடு, கடற்பாசி நிறம், சிவப்பு, டேடோனா கிரே மற்றும் ப்ரிஸ்டைன் வெள்ளை அனைத்து நிறங்களில் மேற்கூரையில் கருப்பு நிறத்தை பெற்றிருக்கின்றது. வேரியண்ட் வாரியான வசதிகள் பின்வருமாறு;-

Punch.ev Smart

  • எல்இடி ஹெட்லேம்ப்
  • ஸ்மார்ட் டிஜிட்டல் டிஆர்எல்
  • மல்டி-மோட் ரீஜென்
  • ESP
  • 6 ஏர்பேக்

Punch.ev Adventure

ஸ்மார்ட் வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக

  • க்ரூஸ் கட்டுப்பாடு
  • மூடுபனி விளக்கில் கார்னரிங் வசதி
  • ஹர்மனின் 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட்
  • ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே
  • EPB ஆட்டோ ஹோல்ட் (Long Range)
  • ஜூவல்டு கண்ட்ரோல் நாப் (Long Range)
  • சன்ரூஃப் (ஆப்ஷனல்)

Punch.ev Empowered

அட்வென்ச்சர் வசதிகளுடன் கூடுதலாக

  • R16 டயமண்ட் கட் அலாய் வீல்
  • AQI டிஸ்ப்ளே கொண்ட காற்று சுத்திகரிப்பு
  • ஆட்டோமேட்டிக் ORVMகள்
  • 7.0-இன்ச் டிஜிட்டல் காக்பிட்
  • SOS செயல்பாடு
  • ஹர்மனின் 10.24-இன்ச் HD இன்ஃபோடெயின்மென்ட்
  • டூயல் டோன் பாடி கலர்

Punch.ev Empowered+

எம்பவர்டூ வசதிகளுடன் கூடுதலாக

  • லெதேரேட் இருக்கைகள்
  • 360º கேமரா சரவுண்ட் வியூ சிஸ்டம்
  • பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர்
  • காற்றோட்டமான முன் இருக்கைகள்
  • Arcade.ev ஆப் கனெக்ட்டிவிட்டி வசதிகள்
  • வயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜர்
  • 10.24-இன்ச் டிஜிட்டல் காக்பிட்

பஞ்ச் எலக்ட்ரிக் காரில் ஸ்டாண்டர்டு வேரியண்ட் ஆனது 3.3 kw மற்றும் லாங் ரேஞ்ச் வேரியண்ட் 7.2kW  வரை AC ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டும் அடுத்தப்படியாக DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினை பெற உள்ளது.

வரும் 17 ஜனவரி 2024 விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற புதிய டாடா பஞ்ச்.இவி காருக்கு போட்டியாக சிட்ரோன் eC3 மற்றும் எம்ஜி காமெட் ஆகியவற்றை எதிர்கொள்ளும்.

tata punch ev suv

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.