கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையில் விவசாய விஞ்ஞானம் பகுதி I மற்றும் II வினாப்பத்திரங்களை மீண்டும் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
விவசாய விஞ்ஞானமானது வெளியாகும் போது ஏற்பட்ட அறிக்கையிடலுடன் பரீட்சைகள் திணைக்களம் இரண்டாம் பகுதியை இரத்துச் செய்தது.
கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இவ்வினாப்பத்திரத்தின் பகுதி I இரத்துச் செய்யப்பட்டதுடன் அதற்கிணங்க அவ்வினாப்பத்திரத்தின் பகுதி 1 மற்றும் II மீண்டும் நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கிணங்க உயர்தரப் பரீட்சை விவசாய விஞ்ஞான வினாப்பத்திரம் பெப்ரவரி 1ஆம் திகதி வியாழக்கிழமை
பகுதி II – மு.ப 8.30 முதல் மு.ப 11.40 மணி வரை
பகுதி I – பி.ப 01.00 முதல் பி.ப. 03.00 மணி வரை
இடம்பெறவுள்ளது.
அத்துடன் இப்பரீட்சைக்கான புதிய பரீட்சை அனுமதி பாத்திரம் பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.